மாணவியொருவரை பாலியல் சேட்டை செய்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது: ஆரையம்பதியில் சம்பவம்

0
202

(விசேட நிருபர்)

Arrested kky

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் மாணவியொருவரை பாலியல் சேட்டை செய்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எதிர் வரும் 10.6.2016ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை(2.6.2016) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவரை பின் தொடர்ந்து அவ்வழியினால் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த மாணவியின் பின் பகுதியில் கையினால் தட்டி விட்டு சென்றுள்ளார்.

குறித்த மாணவி அவ்விடத்தில் நின்றவர்களிடம் விடயத்தை கூறியுள்ளார். இதையடுத்து குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் பொலிசார் ஒப்படைத்துள்ளனர். குறித்த இளைஞரை கைது செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று (4.6.2016) சனிக்கிழமை குறித்த இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர் வரும் 10.6.2016ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY