மண்சரிவில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

0
171

(மாவனல்லை நஸீஹா ஹஸன்)

09386b63-47fb-4659-9e52-10d3ea4cd6b0அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உளவியல் கருத்தரங்கு மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன திப்பிட்டிய ராஜகிரிய கல்லூரியின் பழைய மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கேகாலை மாவட்டத்தில் உள்ள முன்னணி சிங்கள மொழி பாடசாலையான ராஜகிரியவின் பழைய மாணவர்களான ஆர்.பி.வெதகே தூல்தெனிய, எம்.ஏ.என்.மும்தாஜ் தலைமையில் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இதற்கு பெரும் அளவிலான முஸ்லிம் தனவந்தர்கள் உதவி செய்தனர்.

விசேடமாக கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த அஸ்மி ஷரீப், வில்பொல ஜும்மா மஸ்ஜிந் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். பவாஸ், எம்.வை.எம்.வஸீர், எம்.எம்.எம்.முஷாரி மற்றும் திப்பிட்டிய சமாதி மெடிகல் லெப் என்பன பெரும் உதவிகளை வழங்கியதாகவும், அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ராஜகிரிய கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

a6abf487-c4ea-49c0-81ff-1546c3c1839d ce12ed7c-9440-4710-9957-af4272cab234

LEAVE A REPLY