(Photos) வாகனேரியில் மோட்டார் சைக்கில் விபத்து காத்தான்குடி இளம் தம்பதியினர் காயம்

0
58

(வாழைச்சேனை நிருபர்)

3வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில் அதில் பயணித்த கணவனும் மனைவியும் காயமடைந்துள்ள சம்பவம் இன்று (04) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பொலநறுவை பகுதியில் இருந்து காத்தான்குடியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகனேரி சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்ததில் வீதியை விட்டு விழகிச் சென்று விழுந்துள்ளது. இதனால் இதில் பயணித்த கணவனும் மனைவியும் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் புதிய காத்தான்குடி – 06, விடுதி வீதி 02ம் ஒழுங்கையைச் சேர்ந்த ஹிதுரு முஹைதீன் முஹம்மட் றாபி (வயது – 32) மற்றும் அவரது மனைவி லாபீர் அஸ்மாவுல் ஹூஸ்னா (வயது – 22) என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அஸ்மாவுல் ஹூஸ்னா என்பவர் ஆறு மாத கர்ப்பிணி என்று வாழைச்சேனை வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 2 5 6 Valaichenai Hospital

LEAVE A REPLY