இலங்கைக்கு நிதியுதவி வழங்குகிறது சர்வதேச நாணய நிதியம்

0
143

20140329_LDC999இலங்கைக்கு 1. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் 3 வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதுதவிர, இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் உதவியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

-NF-

LEAVE A REPLY