(Poem) அருள் சொரியும் அற்புத மாதம்

0
26

(மதியன்பன்)

Happy-Ramadan-Kareem-Quotes-Wishes-2015அடிவானிற்பிறை தெரிய அக மெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் – அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் – நம்
வினையென்னி மன முருகி அழுவோம்.

நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச்செய்வோம் – நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.

வான்மறையை ஓதுவதை வல்லோன் துதிபாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம்.- உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.

இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம்.- வரும்
இடர்களின் அதனாலே கொல்வோம்.

சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம்- நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.

பகல் நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம்.- இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.

நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். – பின்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.

LEAVE A REPLY