4 பாகிஸ்தான் வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனை

0
110

201606041320089879_Cricketers-have-a-drugs-test-has-been-conducted_SECVPFஐ.சி.சி. உதவியுடன் உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு இந்த சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 4 பாகிஸ்தான் வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், ஒரு நாள் போட்டி கேப்டன் அசார் அலி, சுழற்பந்து வீரர் யாசிர்ஷா, வேகப்பந்து வீரர் ஜுனைத்கான் ஆகியோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதை அணியின் மேலாளர் இன்டிகாப் ஆலம் உறுதி செய்தார்.

இந்த சோதனையில் ஊக்க மருந்து உட்கொண்டது தெரிய வந்தது. இங்கிலாந்து பயணத்தில் மிகப்பெரிய தாக்கததை ஏற்படுத்தியது.

இந்த 4 வீரர்களில் யாசர்ஷா ஏற்கனவே ஊக்க மருந்தில் சிக்கியவர் ஆவார். 3 மாதம் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார். கடந்த மார்ச் இறுதியில் அவரது தடையை ஐ.சி.சி. நீக்கியது.

இதற்கிடையே அவரிடம் மீண்டும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY