சிறந்த நாடுகள் பட்டியலில் சுவீடனுக்கு முதலிடம்

0
7

maavisa_ruotsiஉலகின் சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து டாப்-10 பட்டியலில் டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி பின்லாந்து, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் இந்தியா 70-வது இடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் உலக வங்கி பட்டியலில் அறிவியல், கலாசாரம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சமத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தன்மையை பொறுத்து சிறந்த நாடுகள் தரம்பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY