(Poem) மொஹமட் அலி

0
9

(Mohamed Nizous)

இரும்பு மனிதன்
இறந்து விட்டான்.

நிறத்தைக் காட்டி
நிராகரித்த வெள்ளையர்க்கு
கரத்தைக் காட்டி
கர்ச்சனை செய்தவன்
கண்மூடி விட்டான்

இருட்டு மேகத்துக்கும்
இவனுக்கும்
இருக்கின்ற ஒற்றுமை
கருப்பு நிறமல்ல.
இரண்டிலும்
இடி இறங்கும்
மின்னல் தாக்கலில்
மிரட்சி தரும்

சம்பலும் சோறும்
சாப்பிடுவது போல
சம்பியனாவதை
சாதாரணமாக்கி
சரித்திரம் படைத்தவன்.

அவன்
அலியா?
அல்லது
ஆக்ரோசம் கொண்ட
அலியா வா?
புகுந்து தாக்கும்
புலியா?

அழியாத சரித்திரத்தை
அளித்த அலி
விழியை மூடி விட்டான்.

மற்றவரை வீழ்த்தியவனை
மரணம் வீழ்த்தி விட்டது.
உற்றபடி நோக்கின்
உள்ளது பல பாடம்

LEAVE A REPLY