மத்திய தரை கடலில் அகதிகள் படகு மூழ்கி 117 பேர் பலி

0
71

imageவடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே அங்கிருந்து அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள் கள்ள படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து தஞ்சம் அடைகின்றனர்.

அவ்வாறு வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் லிபியா கடலில் இருந்து வந்த 2 படகுகள் கிரீஸ் அருகே மத்திய தரைக் கடலில் மூழ்கின. அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலில் பயணம் செய்த மேலும் ஒரு அகதிகள் படகு இத்தாலி அருகேயுள்ள கிரட் தீவில் கடலில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் இத்தாலி பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று 340 பேரை பத்திரமாக மீட்டனர்.

இருந்தும் 117 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல்கள் லிபியா கடற்கரை பகுதியில் உள்ள ஷ்வாராவில் கரை ஒதுங்கியது. அவர்களில் 75 பேர் பெண்கள், 36 ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் எகிப்தை சேர்ந்தவர்கள். 700 பேர் ஒரே படகில் ஏறி பயணம் செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது சமீபத்தில் நடந்த சோக சம்பவங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY