பாரிஸ் வெள்ளபெருக்கால் தத்தளிப்பு

0
81

160603053332_paris_2880466gசெயின் நதியின் நீர்மட்டம் ஆறு மீட்டர் உயர்ந்துள்ளது என்றும் அடுத்த சில மணிநேரங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் பாரிஸிலுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரெயில் நிலையங்கள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உயர்ந்து வரும் நீர்மட்டம் நகரத்தின் புகழ்பெற்ற கற்பாலங்களின் அடியொற்றி செல்கிறது. நடைபாதைகள் நீரில் மூழ்கி மறைந்து போயுள்ளன.

இரண்டு பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கன மழை மத்திய பிரான்ஸின் பல பகுதிகளில் வெள்ளபெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் பிறபகுதிகளில், ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் இறந்துள்ளனர் என்றும், பலரை இன்னும் காணவில்லை என்றும் தெரிய வருகிறது.

பெல்ஜியத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் இறந்ததாகவும், பல கிராமங்கள் நீர் நிறைந்ததாகவும் உள்ளன. ருமேனியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு பேர் இறந்துள்ளனர்.

-BBC-

LEAVE A REPLY