அமெரிக்காவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 12 பேர் பலி

0
94

201606040102558905_At-least-12-killed-in-Texas-floods_SECVPFஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையின் காரணமாக வாகன விபத்தும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தொடர் கனமழை பாதிப்பிற்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இராணுவ வீரர்கள் 5 பேரும் அடங்கும்.

தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று கைதிகளின் சிறைகளில் இருந்து கைதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போனவர்களை மொப்ப நாய்களை கொண்டு தேடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY