அட்டாளைச்சேனை நியு கிங்க்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மேலங்கி வெளியீட்டு விழா

0
162

(சப்னி)

13335252_1847851222104773_1697011383_nஅட்டாளைச்சேனை நியு கிங்க்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மேலங்கி வெளியீட்டு நிகழ்வு நேற்று (03) இரவு அட்டாளைச்சேனை தைக்கா நகர் தாஜ் ஹோட்டலில் கழகத்தின் ஆலோசகர் ஆர்.ஹாறூன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை 15, 16 ஆம் பிரிவு இளைஞர்களின் கூட்டமைப்பில் உருவான இக்கழகம் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகின்றது. இக்கழகத்தின் தலைவராக தாஜ் ஹோட்டல் உரிமையாளர் கே.எல்.எம்.தெளபீல் மற்றும் உப தலைவராக தொழிலதிபர் ஐ.எல்.றபீக், செயலாளராக அட்டாளைச்சேனையின் புலமைப் பரீட்சைப் புகழ் ஆர். ஹாறூன் உப செயலாளராக ரி. அஹ்ஷன் ஆகியோர் சிறப்பாக இக்கழகத்தை இயக்கி வருகின்றனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டு இக் கழகத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய தேவையாக இருந்த மேலங்கியை அறிமுகம் செய்து வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கழகத்தின் வீரர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

13341973_1847850928771469_1031315357_n 13382188_1847851095438119_913418298_n

LEAVE A REPLY