கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நேசக்கரம்

0
201

IMG_4934அன்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் கல்விப்பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் 2016.06.02ஆந்திகதி (வியாழக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் ஏதேனும் பாடசாலை மாணவர்கள் எமது நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களினால் ஒரு பாடசாலையேனும் முற்று முழுதாக பயனடைய வேண்டும் அதனை அவர்களிடம் நேரடியாக வழங்கிய திருப்தியையும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் எமது நிறுவனம் பெற வேண்டுமென்ற அடிப்படையில் இலங்கையில் பல சமூகப்பணிகளை குறிப்பாக கல்விக்காக தனது சமூகப்பணியினை மேற்கொண்டு வரும் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தினை தொடர்புகொண்டு தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து AL-HIKMA COLLEGE யில் கல்வி கற்கும் 160 மாணவர்கள் இவ்அனர்த்தத்தினால் முற்றுமுழுதாக தங்களது பாடசாலை சீருடைகள் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைத்து விதமான புத்தகங்கள், குறிப்பு கொப்பிகள் அனைத்தையும் இழந்த நிலையில் தற்பொழுது இப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள் என்பது ஓர் மனவேதனைக்குரிய விடயமாகும்.

இவ்விடயம் அறிந்து கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொருளாளரும், கல்விப்பிரிவுத்தலைவருமான றாஸி அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் கொழும்பிலுள்ள இலங்கை நெய்னார் சமூக நல காப்பக காரியாலயத்தில் வைத்து அதன் பொதுச்செயலாளர் இம்ரான் நைனார் அவர்களிடம் கையளித்து அவர்களினூடாக இப்பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களை கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_4913இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் பொதுச்செயலாளர் இம்ரான் நைனார் மற்றும் முஹம்மட் றாஸிக் அவர்களுடன் இணைந்து கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொருளாளரும், கல்விப்பிரிவுத்தலைவருமான றாஸி, செயலாளர் ஹைதர் அலி, சமூக சேவைப்பிரிவுத்தலைவர் றிபாஸ், ஊடக இணைப்பாளர் உசைத், உறுப்பினர்களான சிம்ஸான், றிபாஸ் மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் குறுநாகலை மாவட்ட இணைப்பாளரும், இளங்கண்டு பிடிப்பாளருமான சக்கி லத்தீப் ஆகியோரினால் ஒரு தொகை பாடசாலை கற்றல் உபகரணங்களை கொழும்பில் அமைந்துள்ள AL-HIKMA COLLEGE யின் பிரதி அதிபர் மற்றும் பாடசாலை அனர்த்தப்பிரிவு ஆசிரியர் குழுவினரிடம் பாடசாலையில் வைத்து கையளித்தனர்.

இப்பாடசாலை உபகரணங்களை பெற்றுத்தருவதற்கு எமக்கு மிகவும் உருதுணையாகவும், பக்க பலமாகவுமிருந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளான மட்/மம/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் நைனா முஹம்மட், மட்/மம/ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலய அதிபர் சஹாப்தீன், மட்/மம/ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் செயினம்பு, மட்/மம/செம்மன்னோடை அல்-ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், மட்/மம/மாவடிச்சேனை இக்பால் வித்தியாலய அதிபர் இஸ்மாயில், மட்/மம/பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய அதிபர் ஹப்பார், மட்/மம/வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலய அதிபர் ஹஸ்ஸாலி, மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் முபாரக் மற்றும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் அபுல்ஹசன் ஆகியோருக்கு எமது நிறுவனத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, நமது அனைவரினதும் இப்பணியினை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

மேலும் எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் இப்படியானதொரு திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கிய எமது நிறுவனத்தின் உறுப்பினர்களான நப்ராஸ், றிஸா அஹமட் மற்றும் ஹசான் ஆகியோருக்கும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உசைத்
ஊடகப்பிரிவு இணைப்பாளர்

IMG_4930 IMG_4936.JPG

LEAVE A REPLY