இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் காத்தான்குடியில் பேரீச்சம்பழ விநியோகம்

0
160

(எம்.ரி.எம். யூனுஸ்)

FB_IMG_1464891115780-1024x576காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மனிதாபிமான சக வாழ்வுக்கான பிரிவினூடாக புனித நோன்பினை முன்னிட்டு காத்தான்குடி, காங்கேயனோடை, பாலமுனை, கீச்சான் பள்ளம், ஒல்லிக்குளம், சிகரம், மன்முனை, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் தோப்பூர் பிரதேச பள்ளிவாயல்களுக்கான பேரீச்சம்பழ விநியோகம் இடம்பெற்றது.

சவூதிஅரேபிய மற்றும் குவைட் நாட்டு தனவந்தர்களின் உதவியுடன் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 58 பள்ளிவாயல்களின் 18000 குடும்பத்தினருக்கும் தோப்பூர் பிரதேசத்திலுள்ள 18 பள்ளிவாயல்களில் 5000 குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ வீதம் பகிர்ந்தளிப்பதற்காக பேரீச்சம்பழம் விநியோகம் பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய தலைவர் அலியார் றியாழி மற்றும் செயலாளர் ஜாபிர் நளீமி ஆகியோர் பள்ளிவாயல் நிறுவாகத்தினரிடம் பேரீச்சம்பழங்களை கையளித்தனர்.

FB_IMG_1464891094566-1024x576 FB_IMG_1464891098867-1024x576 FB_IMG_1464891112172-1024x576

LEAVE A REPLY