ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 100 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

0
154

imageரஷ்யாவின் சைபீரியா மாகாணம், கெமரோவோ பகுதியில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. ஜார்சென்ஸ்கயா நிறுவனத்தின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான இது, 1953ம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திற்குள் இன்று சுமார் 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். அப்போது மின்சார கம்பி மூலம் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் சுரங்கத்தைவிட்டு வெளியேறினர்.

ஒருசிலர் மட்டுமே வெளியேறிய நிலையில், பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதனால் தொழிலாளர்கள் சிலர் தீயில் சிக்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.

ஆனால், மீட்புக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு சுரங்கத்தில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக வெளியேற்றினர். 4 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ பெரிய அளவில் பரவாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

சுரங்கத்தினுள் விபத்து ஏற்படுவதை தடுக்க கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சுரங்க நிர்வாகம் உறுதி அளித்து அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிய சில தினங்களில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY