இந்தியாவில் பயங்கர சாலை விபத்து: 8 பேர் பலி

0
88

imageஇந்தியாவில் கிருஷ்ணகிரி அருகே மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, லாரி மற்றும் ஒரு கார் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் பலர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் அவர்களுக்கு உதவியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் 8 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த லாரியின் டயர் பஞ்சரானதால் தாறுமாறாக ஓடி எதிரே வந்த பஸ் மற்றும் கார் மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY