உணவு அல்லாத பொருட்கள் வினியோகம், மெடிகல் கிளினிக் மற்றும் அடுத்த கட்ட நிவாரணப் பணிகளில் முஸ்லிம் எய்ட்

1
157

(அஸீம் கிலாப்தீன்)

MuslimAidlogo-Web-20140606115859330கடந்த வாரம் மருத்துவ முகாம் செயற்பாடுகளிலும், வீடுகள் சுத்திகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்த முஸ்லிம் எய்ட், பிரண்டியாவத்த அல் ஹனிப் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்கள் அடங்கிய 200 பொதிகளை இன்று மாலை வினியோகிக்கவுள்ளது. RCC கொலன்னாவ பிரதேச செயலக அலுவகத்தின் தேவை மதிப்பீட்டுத் தகவலின் அடிப்படையில் இவ் வினியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தவிர, சுயதொழில் வாய்ப்புகளை வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக இழந்துவிட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன், அவர்களது சுயதொழில்களை மீள ஆரம்பிக்கச் செய்யும் வகையில், பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியில் கொஹிலவத்த, மீத்தொட்டு முல்ல மற்றும் மெகடகொலொன்னாவ பகுதிகளில் முஸ்லிம் எய்ட் ஈடுபட்டு வருகின்றது.

பாடசாலை, வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய துறைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உதவும் நோக்குடன் தகவல் திரட்டும் பணியிலும் அடுத்த கட்டமாக முஸ்லிம் எய்ட் ஈடுபடவுள்ளது.

மேலும் ,HCC யின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் விரைவில் நடைபெறவுள்ள மெடிகல் கிளினிக் செயற்பாடுகளில் SFRD எம்எப்சிடி, சபாப் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் விரைவில் ஈடுபடவுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY