முஸ்லிம் உலகத்திற்கான ஒரேவித நாட்காட்டி – இஸ்லாமிய அறிஞர்கள் இணக்கம்

1
380

(எம்.ஐ. அப்துல் நஸார்)

imageமுஸ்லிம் உலகத்திற்கான ஒரேவித நாட்காட்டி முறைக்கு உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் கடந்த திங்கட்கிழமையன்று இணக்கம் தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தின் மூலம் பல தசாப்தங்களாக நிலவி வந்த பிறை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக எகிப்திய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

பொதுவாக ரமழான் மாத ஆரம்பத்தோடு பிறை தொடர்பான சர்ச்சையும் ஆரம்பமாகிவிடும். ஏனைய மாதங்களின் தலைப்பிறை சம்பந்தமாக ரமழான் மாதத்தில் ஏற்படுமளவு சர்சைகள் தோன்றுவதில்லை. அடங்கிப்போய் அமைதியாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விடயம் புனிதமான மாதத்தில்இ பொறுமையின் மாதத்தில் பொங்கிப் பிரவாகிக்கின்றது. காலத்தின் பொருத்தம் கருதியும் எமது உயிர் மூச்சாகப் பேண வேண்டிய சமூக ஒற்றுமைக்கு எதிர்காலத்திலாவது பங்கம் ஏற்படாதிருக்க வேண்டும் என்ற நோக்கிலும் வாசகர்களுக்காக முஸ்லிம் உலகத்திற்கான ஒரேவித நாட்காட்டி தொடர்பான தகவலை வழங்குகின்றோம்.

முஸ்லிம் உலகத்தைக் கூறுபோட்டு வைத்திருந்த நீண்டகால முரண்பாட்டுக்கு தீர்வொன்று கிடைத்துவிட்டதென்ற நம்பிக்கையோடு சர்வதேச ஹிஜ்ரி நாட்காட்டி தொடர்பாக எகிப்தின் இஸ்தான்பூலில் நடைபெற்ற மாநாடு கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது. எகிப்திய அரசாங்க மத விவகார தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஒன்று கூடிய உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒரேவித நாட்காட்டி முறைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு இஸ்லாமிய விடுமுறைகளை அனுஷ்டிப்பதற்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகின்றதுஇ குறிப்பாக இன்னும் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாத நோன்பினையும் அதனைத் தொடர்ந்து வரும் பொருநாளையும் ஒரே தினத்தில் அனுஷ்டிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘இந்த மாநாடு அறுபது ஆண்டுகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது சரியானதொரு முடிவு’ என எகிப்திய அரசாங்க மத விவகார தலைமையகத்தின் தலைவர் மெஹ்மட் கொர்மெஸ் எகிப்திய நாளிதழான டெயிலி சபாஹ் வெளியீட்டுக்கு தெரிவித்தார்.

துருக்கி, கட்டார், ஜோர்தான், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களைக் கொண்டமைந்த விஞ்ஞான சபையின் நீண்டகால ஆராய்சி தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக சனிக்கிழமையன்று இந்த மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் சவூதி அரேபியா, மலேஷியா, ஐக்கிய அரபு இராச்சியம், மொரோக்கோ உள்ளிட்ட சுமார் ஐம்பது நாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம் மாநாட்டில் பங்குபற்றின. 1979 ஆம் ஆண்டிலும் ஒரேவித நாட்காட்டியினை உருவாக்கும் நோக்கில் இவ்வாறானதொரு மாநாடு நடாத்தப்பட்டபோதிலும் அந்த முயற்சி மந்த நிலையிலேயே தொடந்து வந்த ஆண்டுகளில் காணப்பட்டது.

இந்த மாநாட்டிற்கான ஆயத்தங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் உலகில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நிலவுகின்ற பல்வேறு அபிப்பிராயங்களை கலந்துரையாடுகவதற்காக வானியல் மற்றும் பிக்ஹ் என்றழக்கப்படும் இஸலாமிய சட்டக்கலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ஒன்றிணைத்து ஆணைக்குழுவொன்றினை உருவாக்கியதோடு ஆரம்பமானது என கொர்மெஸ் தெரிவித்தார்.

‘இந்த மாநாடு வெறுமனே விடயங்களைக் கலந்துரையாடிவிட்டு செல்கின்ற ஒன்றாக அல்லாது உறுதியான முடிவினை எடுப்பதற்கு உருவாக்கப்பட்ட ஆணைக்குழு வழிவகுத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எங்களிடம் இறுதியில் இரண்டு முன்மொழிவுகள் காணப்பட்டன ஒன்று இரட்டை நாட்காட்டி முறை அல்லது ஒற்றை நாட்காட்டி முறை ஆகியனவாகும்’ எனவும் கொர்மெஸ் தெரிவித்தார்.

மேற்கு அரைக்கோளத்திற்குஇ குறிப்பாக வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள முஸ்லிம்களுக்கு தனியான நாட்காட்டிமுறை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ‘இரட்டை நாட்காட்டி முறை பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரமாட்டாது. உலகின் அனைத்து பாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்றத்தக்க ஒற்றை நாட்காட்டி முறை தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்தினோம். அதன் பிரககாரம் ரழமான் ஒரே தினத்தில் ஆரம்பமாகும். நாம் இந்த நிலைப்பாட்டினை வாக்கெடுப்புக்கு விட்டோம், பெரும்பான்மையான அறிஞர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் துருக்கியைச் சேர்ந்த சிரேஷ்ட அறிஞர்களும், கட்டாரைச் சேர்ந்த இஸ்லாமிய சட்டக்கலை நிபுணரான பேராசிரியர் அலி முஹுத்தீன் அல்-குறா தாஹி, ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த முன்னணி வானியல் நிபுணரான மொஹமட் சௌகத் அவ்தா ஆகியோருடன் இன்னும் பல பிரபல அறிஞர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தீர்மானம் முஸ்லிம் நாடுகளின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்திற்காக முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு தற்போது அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சில நாடுகள் புதிய நாட்காட்டியை அங்கீகரிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கக் கூடும், ஆனால் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாட்காட்டியின் அங்கீகாரத்திற்கான செல்வாக்கினைச் செலுத்தலாம். ‘இது தற்போது நடந்துகொண்டிருக்கும் முன்னெடுப்பு இறைவன் நாடினால் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். முஸ்லிம்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஒரு சமூகமாகும், இந்த நிலையில் ஒருமித்த நாட்காட்டி அவசியமானதாகும்.’ எனத் தெரிவித்த கொர்மெஸ் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் இது ஒரு பாரிய சவாலாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சமய அனுஷ்டானங்களை மாறுபட்ட தினங்களில் அனுஷ்டிக்கின்ற சிறிய பள்ளிவாயல்களுக்கிடையேயான முரண்பாடுகள் கூர்மைப்பட்டிருக்கும் நிலையும் அதேபோன்று குடும்பங்களியே காணப்படுகின்ற கருத்து வேறுபாடுளும் இதன் மூலம் முடிவுக்கு வரும் எனவும் அவர் நம்;பிக்கை தெரிவித்தார்.

முஸ்லிம் சிறுபான்மையினரைப் பொறுத்த வரைஇ விஷேடமாக மேற்கு நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒற்றை நாட்காட்டி முறை என்பது அவர்கள் தமது சமயம் சார்ந்த விடுமுறைகளை அனுஷ்டிப்பதற்கான உரிமைகளை உறுதிப்படுத்தும் விடயமாகும். சிறுபான்மையினர் தமது சமயம் சார்ந்த விடுமுறைகளை அனுஷ்டிப்பதற்கான உரிமைகளுக்காக போராடி வந்தனர். இறுதியாக தற்போது அதனை அடைந்து கொண்டுள்ளனர் எனவும் கொர்மெஸ் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளில் அவர்களது சமய அனுஷ்டானத்திற்கான திகதிகளை சரியாக குறிப்பிடுமாறு கோரப்படும்போது ஒற்றை நாட்காட்டி முறை அதற்குத் தீர்வாகவாக அமையும். எனவும் கொர்மெஸ் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக முஸ்லிம் அறிஞர்களிடையே சமய விடுமுறை அனுஷ்டானங்கள் மற்றும் தொழுகை நேரங்கள் போன்றவை விவாதத்திற்குரிய விடயங்களாகக் காணப்பட்டனஇ விஷேடமாக தியாகத் திருநாள் என வர்ணிக்கப்படுகின்ற ஈதுல் அழ்ஹாவின்போது குர்பானி அனுஷ்டானம்இ ஹஜ் யாத்திரையின் நிறைவு என்பவற்றைக் குறிப்பிடலாம். தலைப்பிறையினைக் காணுதல் தொடர்பில் இஸ்லாமிய சட்டம் சம்பந்தமாக மேதாவித்தனமாக வெளியிடப்படுகின்ற விளக்கங்களே பிரச்சினைகளுக்கு ஆணிவேராக அமைகின்றன.

விஞ்ஞான உண்மைகள் சம்பந்தமாக இஸ்லாமிய உலகில் தவறான புரிதல்கள் அல்லது அவற்றை கருத்திலெடுக்காத தன்மைகள் காணப்படுகின்றன. இக்காலத்தில் மனிதனால் சந்திரனுக்கு போக முடிகின்றது. வினாடிக்கு வினாடி சூரியனினதும் சந்திரனினதும் நகர்வுகளை அவதானிக்கு முடிகின்றது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய விஞ்ஞான முன்னேற்றம் இதுவாகும். இவாறான முன்னேற்றங்களை புறக்கணித்துவிட்டு உயரத்தில் ஏறி வெற்றுக் கண்ணால் பிறையினைக காணவேண்டும் என வலியுறுத்துவது பிழையாகும் எனவும் கொர்மெஸ் தெரிவித்தார்.

அறிவைத் தேடுமாறும் அதனைப் பயன்படுத்துமாறும் இஸ்லாம் எம்மை வலியுறுத்துகின்றது. தற்போதைய நிலையில் பிரச்சினைகள் முற்றுமுழுதாக தீர்க்கப்படாவிட்டாலும் கூட எகிப்திய அரசாங்க மத விவகார தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின் தீர்மானம் அதனை நோக்கிய பயணத்தின் முதல் படியாக இருக்கும். இந்த நாட்காட்டி ஒற்றுமையினை உலக இஸ்லாமிய அறிஞர்கள் வரவேற்பார்கள் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

1 COMMENT

  1. மாஷா அல்லாஹ். இம்மாபெறும் முயற்சி வெற்றி பெற வேண்டும், ஆசிரியரே இது எப்போது நடைமுறைக்கு வரும்?

LEAVE A REPLY