சிறைச்சாலை பஸ் துப்பாக்கி பிரயோக சம்பவம்; மற்றொருவர் கைது

0
138

t56கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து, சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத விசாரணை பிரிவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (31) ஐவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களை விசாரணை செய்தபோது, மற்றொருவர் தொடர்பில் தகவல் கிடைத்ததாக தெரிவித்த பொலிஸார், கனேமங்கல இந்திய உதய பண்டார எனும் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ரி56 வகை துப்பாக்கி ஒன்று, 08 துப்பாக்கி ரவைகள், வெற்று மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#Thinakaran

LEAVE A REPLY