பிரபல குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி வைத்தியசாலையில் அனுமதி

0
15

201606031206118681_Muhammad-Ali-in-hospital-with-respiratory-issue_SECVPFகாசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

தற்போது சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY