ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கோர்ட்டில் ஆஜர்

0
137

201606030132103186_Bangladeshs-exPM-gets-time-to-face-court-over-graft_SECVPFவங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா. இவர் வங்காளதேச தேசியத்துவ கட்சியின் தலைவரும் ஆவார்.

இவர் பிரதமர் பதவி வகித்தபோது, மேலும் சிலருடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஊழல் புரிந்து ஒரு அறக்கட்டளையை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கலீதா ஜியா மற்றும் மேலும் 8 பேர் மீது டாக்காவில் உள்ள 3-வது எண் தனிக்கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கோர்ட்டில் நீதிபதி அபு அகமது ஜோமதார் முன்னிலையில் கலீதா ஜியா நேற்று நேரில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணையின் போது அவருக்கு எதிராக 32 அரசு தரப்பு சாட்சிகள் சாட்சியம் அளித்தது தொடர்பாக அவரிடம் நேற்று நீதிபதி கேள்விகள் எழுப்பி, அவரது பதில்களை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி வரும் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கலீதா ஜியா ஆஜரானதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அவரது கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

LEAVE A REPLY