காத்தான்குடியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படு காயம்.

0
167

முஹமட் அல்-நஹியான்

சற்று முன் (02) இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியவாறு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் காத்தான்குடி பிரதான வீதி இரும்பு தைக்கா பள்ளிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் வசிக்கும் 21 வயதுடைய சஜாத் எனும் இளைஞன் படு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் மற்றுமொரு 21 வதுடைய சஹான் எனும் இளைஞன் கடுங்காயங்களுடன் காத்தான்குடி பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வேக கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக இவ் விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.13334720_10206816088026421_793114725_o

13383341_10206816087906418_1045028978_o

13351041_10206816086706388_1360973395_o

13340848_10206816086546384_105726754_o

13349068_10206816227589910_1761504764_n

13334747_10206816087626411_2055981613_o

LEAVE A REPLY