கல்லடியில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு ஊர்வலம்

0
164

(எம்.ரி.எம்.யூனுஸ்)

imageசர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி திணைக்களம் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் கல்லடி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாடு செய்த புகைத்தல் மது எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 02.06.2016 வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்லடி வேலூர் சக்தி வித்தியாலத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி கல்லடி மணிக்கூட்டு சந்தியை அடைந்து கல்லடி வாழ்வின் எழுச்சி வங்கியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் “போதை மனிதா பாதையை அறிந்து சென்றால் வெற்றி உனக்கு” “விழித்தெழு புகையால் உனக்கு கேடு மட்டுமே அன்றி வேறில்லை” “புகைத்தால் ஆயுள் 5 வருடம் குறைந்து விடும்” போன்ற சுலோகங்களை தாங்கி ஊர்வலமாக சென்றனர்.

பேரணியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வே.தவராஜா முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கி.நிர்மலா கல்லடி வலய வாழ்வின் எழுச்சி முகாமையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்கள் கல்லடி வலயத்திற்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவு பயணாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY