சீமெந்து மூட்டையின் விலை 60ரூபாவினால் அதிகரிப்பு

0
141

bag_of_cement50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய ஐந்து வர்த்தக சின்னங்களின் கீழான சீமெந்து மூட்டைகளின் விலைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படியில் 870 ரூபாய் ஆக காணப்பட்ட சீமெந்து மூட்டையின் புதிய விலை ரூபாய் 930 ஆகும்.

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்தமையை கருத்தில் கொண்டு சீமெந்து விலை விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் இதற்கு முன்னர் நுகர்வோர் அதிகர சபையிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY