முத­ல­மைச்­சர்­ முஸ்லிம் என்­பதால் பிரச்­சி­னையை பெரி­து­ப­டுத்­தினர் : ராஜித்த சேனா­ரட்ன

0
219

rajitha-senaratne-eastern-province-chief-minister-nasser-ahamadமுத­ல­மைச்­சர்­க­ளுக்கு தடைவிதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கோ அல்­லது படை­யி­ன­ருக்கோ அதி­காரம் கிடை­யாது. கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­ப­த­னா­ லேயே எதிர்ப்­புக்கள் கிளம்­பின. இப்­பி­ரச்­சி­ னையை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சுமு­க­மாகத் தீர்த்துவைத்­துள்­ளனர் என்று அர­சாங்கம் அறி­வித்­தது.

வாராந்த அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­போதே அதில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித்த சேனா­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு உரை­யாற்­றிய சுகா­தார அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன

முத­ல­மைச்­சரை மக்­களே தேர்ந்­தெ­டுக்­கின்­றனர். மக்­களின் ஆணை முத­ல­மைச்­ச­ருக்கு கிடைக்­கின்­றது. எனவே முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக தடை விதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கும் படை­யி­ன­ருக்கும் அதி­காரம் கிடை­யாது.

இரா­ணுவம் என்­பது ஒரு திணைக்­க­ள­மாகும். முத­ல­மைச்சர் பதவி என்­பது மக்­களால் தெரிவு செய்­வ­தாகும். இச்­சம்­பவம் தொடர்­பாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் எழுத்து மூலம் மன்­னிப்பு கேட்­டுள்­ள­தோடு கவ­லை­யையும் தெரி­வித்­துள்ளார்.

எனவே படை­யினர் விதித்த தடையை ஜனா­தி­பதி நீக்­கி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தியே தீர்­மா­னத்தை எடுத்­தினர். எனவே இதில் எந்­த­வி­த­மான பிழையும் இல்லை. அத்­தோடு கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் சம்­பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்­சியும் அர­சியல் நாக­ரி­கத்­துடன் நடந்து கொண்­டது.

நாம் அதி­காரப் பர­வ­லாக்­களில் நம்­பிக்­கை­வைத்­த­வர்கள். அதி­காரப் பர­வ­லாக்­கலை வழங்க வேண்டும் என்­பதில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எனவே அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்குள் முத­ல­மைச்­சர்­களின் வகி­பாகம் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

இப்­பி­ரச்­சினை சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­பதால் இச் சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. .

சிறு சிறு தவ­றுகள் இடம்­பெ­றலாம். அர­சி­யலில் இது சக­ஜ­மாகும். ஆளு­நரை ஜனா­தி­பதி தான் நிய­மிப்பார். அதே­வேளை முத­ல­மைச்­சரை மக்­களே தெரிவு செய்­கின்­றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் தொப்பி கழற்­றப்­பட்டு அவர்­க­ளது தலையில் குட்­டப்­பட்­டது. இதன்­போ­தெல்லாம் எவரும் பேசவும் இல்லை. விமர்­சிக்­கவும் இல்லை.

எவன்கார்ட்

எவன்கார்ட் நிறு­வனத் தலைவர் ஊட­க­வி­ய­லா­ளர்­களை புகைப்­படம் எடுத்­தது தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும். உயிர் அச்­சு­றுத்தல் உள்ள ஊட­க­வி­ய­லா­ருக்கு பாது­காப்பு வழங்­கப்­படும்.

கடல் பாது­காப்பு தொடர்பில் எவன்­கார்ட்டை விட கடற்­ப­டை­யினர் பொறுப்­பேற்று 500 கோடிக்கு மேல் அர­சுக்கு வரு­மா­னத்தை பெற்றுக் கொடுத்­துள்­ளனர். இதனை கடற்­படை தள­பதி தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்­திய அம்­பி­யூலன்ஸ் சேவைக்­கான ஆட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு அவர்­க­ளுக்­கான பயிற்­சிகள் இந்­தி­யாவில் வழங்­கப்­ப­டு­கி­றது.

இதனால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். கடந்த காலத்தில் இச்சேவையை இந்தியாவுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதாக பலர் விமர்ச்சித்தனர்.

பிரதமரின் கீழுள்ள தேசிய பொருளாதார கொள்கைகள் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு உட்பட சுகாதார அமைச்சும் இச் சேவைக்கு தமது பங்களிப்பினை வழங்குகின்றது.

அம்பியூலன்ஸ் வண்டி சாரதிக்கும் சுகாதார ரீதியில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்றார்.

-VK-

LEAVE A REPLY