மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் விமானத்தின் ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞை கண்டுபிடிப்பு

0
92

160601160754_egypt_2877530hபிரஞ்சு கடற்படை கப்பல்களில் ஒன்று, கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் என்ற விமானத்தின் விமான ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை கண்டறிந்துள்ளதாக பிரஞ்சு விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த சமிக்ஞை, தேடப்படும் பகுதியின் கடல் படுகையிலிருந்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன், 66 விமான பயணிகளுடன் பாரிஸிலிருந்து கெய்ரோவிற்கு சென்றுகொண்டிருந்த அந்த Airbus 320 விமானம் விபத்துக்குள்ளானது.

கிரேக்க மற்றும் எகிப்திய ராடார் திரைகளிலிருந்து வெளிப்படையாக எந்த அபாய அறிகுறிகளையும் கொடுக்காமல் அந்த விமானம் மறைந்துவிட்டது.

LEAVE A REPLY