ஒருமித்த சர்வதேச ஹிஜ்ரி நாட்கணிப்பீடு இலங்கையிலும் அமுல் படுத்தப் பட உரிய தரப்புக்கள் உடன் படல் காலத்தின் கட்டாயமாகும்

0
628

 (மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி)

Maseehudeen inamullahகடந்த திங்கட் கிழமை துருக்கி தலை நகர் ஸ்தான்பூலில் இடம் பெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் முஸ்லிம் உம்மாவிற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை அறிமுகப்படுத்துவது குறித்த உடன்பாடு எய்தப்பட்டுள்ளது.

மேற்படி மாநாட்டில் சுமார் 60 நாடுகளில் இருந்து பாத்வா, பிக்ஹு இஸ்லாமிய அமைப்புக்களும், இஸ்லாமிய வானியல் ஆய்வு நிறுவனங்களும் பங்கு பற்றின, குறிப்பாக:

o மக்காவில் உள்ள ராபிததுல் ஆழம் இஸ்லாமியின் பிஹு கவுன்ஸில் o இந்திய துணைக் கண்ட பிக்ஹு கவுன்ஸில்

o சவூதி அறேபியாவில் உள்ள உயர் சன்மார்க்க அறிஞர்கள் நிறுவனம் o சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம்

o அறேபிய இஸ்லாமிய மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள பத்வா அமைப்புக்கள்.

o அவுஸ்திரேலியா, ரஷ்யா வடா தென் அமெரிக்க ஆபிரிக்க நாடுகளில் உள்ள பாத்வா பிக்ஹு அமைப்புக்கள்.

o பிறைக் கணிப்பிற்கான சர்வதேச இஸ்லாமிய செயற்திட்டம் o உம்முல் குறா பிறைக் கணிப்பீட்டு அமைப்பு

o வட அமெரிக்க இஸ்லாமிய ஒன்றிய வானியல் மையம்

o மற்றும் ஆசிய தெற்காசிய நாடுகளில் உள்ள உலமா மற்றும் பாத்வா அமைப்புக்கள்

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்கள் நிறுவனங்கள் ஆய்வு மையங்கள் அறிஞர்கள் எல்லோரும் ஒன்று கூடிய மிகப் பெரும் மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மேற்சொன்ன அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஐந்து ஆய்வு மாநாடுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாநாட்டில், பிறைகளின் பிறப்பு, பிறை காணப்படல் (குறிப்பிட்ட ஒரு நாட்டில் காணல், அண்மித்த பல நாடுகளில் காணல், சர்வதேச பிறை) பிறை கணிப்பீடு, செய்தல் நடைமுறையில் உள்ள பல்வேறு முறைகளையும் விரிவாக ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

o வானியல் சாத்தியப் பாடுகளுடன் கூடிய கணிப்பீட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளல்.

o தற்பொழுது எய்தப்பட்டுள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட கணிப்பீட்டு முறையை இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் அங்கீகாரத்திற்காக சமர்பித்தல்.

o பிறை காணுதல், கணிப்பீடு செய்தல் முறைமைகளுடன் முரண்படாது செயற்படும் வகையில் நவீன வானியல் அவதான மையங்களை அறிஞர் குழுக்களின் மேற்பார்வையில் உலகின் பல பாகங்களிலும் நிறுவுதல்.

o வெளியிடப்பட்டுள்ள ஒருமுகப்படுத்த ஹிஜ்ரி நாட்காட்டியை அமுல் படுத்துமாறு சிருபனமையாக வாழும் முஸ்லிம்களை கேட்டுக் கொள்ளுதல்.

உலக முஸ்லிம்களின் நீண்ட கால கனவாகிய ஒருமுகப்படுத்தப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை அமுலுக்கு கொண்டுவர முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களும், அதிகாரமும் அங்கீகாரமும் உள்ள உலமாக்களும் மேற்படி ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதனால் தலைமைகளுக்க கட்டுப்படும் முடிவை முஸ்லிம் சமூகங்கள் எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இலங்கை முஸ்லிம் விவகார அமைச்சு கொழும்பு பெரிய பல்லை வாயல் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் சகலரும் மேற்படி இஜ்திஹாத் முடிவுகளை அங்கீகரித்து அமுல் படுத்துமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

LEAVE A REPLY