அன்று திருகோணமலை அபிவிருத்தி குழு கூடத்தில் நடந்த உண்மைகள்..!

0
225

30bc6294-db86-412a-8f8e-83565d93ceaaகடந்த 30.05.2016ஆம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை மாவட்ட காரியாலத்தில் அரசாங்க அதிபர் திரு. புஸ்பகுமார தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது.

குறித்த அபிவிருத்தி குழு கூட்டதின் அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்  தலைமை தாங்கினார். அத்துடன் இணை அபிவிருத்தி குழுத்தலைவரான பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், எம்.எஸ். தௌபீக்,துரைரத்தினம், மாகாண அமைச்சர்களான ஆரியவதி கலபதி, தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாகிர், ஜனார்த்தனன், ராஜேஸ்வரன் மற்றும் அருண உட்பட திருகோணமலை மாவட்டத்தின் அரச திணைக்களங்களின் தலைவர்கள் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அன்றைய கூட்டத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுதலைவருமான ஆர்.எம். அன்வரால் நியாயம் கேட்டு எழுப்பிய கேள்விகள் சில…

கிழக்கு முதல்வரின் சம்பூர் விடயமாக பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களால் சம்பூரில் நடந்த விடயம் தொடர்பாக கொண்டு வந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகிர் போன்றோரால் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் தடுத்து நிறுத்தபட்டது குறித்த பிரச்சினையின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதி அமைச்சரை நோக்கி சில கேள்விகளை எழுப்பினார்.

01.கடந்த காலங்களில் சிறு பாண்மையினருக்கு இடம்பெற்ற அநியாயங்களை எப்போதாவது இந்த கூட்டத்தில் பேசினீர்களா புதிதாக முதலமைச்சர் விடயத்தினை பேசுவது வேடிக்கை.

02. அரசாங்க அதிபரை நோக்கி அன்வரால் அவ்வாறு இந்த கூட்டத்தில் இதை பேச இடமளித்தால் அமைச்சருக்கு எமக்கும் கடந்த கால அநியாயங்களை பேச இடமளிக்க வேண்டும்.

03. அமைச்சர் இந்த விடயத்தை இதில் பேசுவது இனவாதத்தை தூண்ட காரணமாக அமையும் எனவே அரசாங்க அதிபரே கூட்டத்தின் நோக்கமறிந்து நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடத்தும்படி அன்வர் வேண்டிக்கொண்டார்.

03.கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் உள்ளவிடயத்தை இதில் எடுக்கவேண்டிய அவசியமில்லை என்றும்.

04. பிரதி அமைச்சர் முப்படை தளபதிகளும் இக்கூட்டதிற்கு வருகை தரவில்லை எனவே அவற்றுக்கு என்ன முடிவு எவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெரும் என வினவ அன்வர் அரசாங்க அதிபரை நோக்கி அவ்வாறாயின் கூட்டத்தை உடனே நிறுத்தி கொண்டு வேறொரு தினத்தில் ஏற்பாடு செய்யும்படி வேண்டிக்கொண்டார்.

05. நிலாவெளி கோபாலபுரம் பள்ளிவாயலுக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றை குறித்த பள்ளிவாசலுக்கு வழங்குபடி பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் மற்றும் அன்வரால் கேட்டதற்கு.

அவற்றை வழங்க மத்திய சுற்றாடல் சபை நீர் தேங்கும் என்பதால் நிரப்ப முடியாது என பிரதேச செயலாளரால் சொல்லபட்டது. பின்னர் அன்வரால் அப்படியாயின் எவ்வாறு தற்பொழுது அமைக்கப்படுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை குறித்த நீர் தேக்கத்தின் பகுதியை நிரப்பி கட்டும்போது குறித்த சட்டமும் மத்திய சுற்றாடல் சபையும் எங்கு இருந்தது பின்னர் அவற்றை ஆராய ஒரு குழு அமைக்கபட்டுள்ளது.

06. குச்சவெளி பிரதேச மீள் குடியேற்றதிற்காக ஒதுக்கபட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்து அப்துல்லா மஹ்ரூப் குறித்த இடங்களை குறிப்பிடும்படி கேட்கப்பட்டது.

அதற்கு குச்சவெளி பிரதேசத்தின் கும்புறுபிட்டி கிழக்கு மற்றும் தென்னமரவாடி பிரேசம் மாத்திரமே தெரிவுசெய்யபட்டது குறித்த மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் வினாவை எழுப்பினார்

அதில் ஒரு முஸ்லிம் பிரதேசம் கூட தெரிவு செய்யபடாமைக்கான காரணத்தை குச்சவெளி பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவை மாவட்ட செயலகத்தினாலேயே தெரிவுசெய்யபட்டது என குறிபிட்டார்

பின்னர் அரசாங்க அதிபரை நோக்கி அன்வர் இந்த நல்லாட்சியிலும் இவ்வாறு நமது பிரதேச மக்கள் புறக்கணிக்கபடுவது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது இனியாவது எதிர்கால நடவடிக்கையின் போது இனவிகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு இடம்பெற நீங்கள் சரியாக கண்காணிக்க வேண்டும் என அன்வர் தெரிவித்ததை அடுத்து கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் தண்டாயுதபாணி உண்மையில் மாகாண சபை அன்வர் கூறியவிடயம் சரியானது நாம் இந்த நாட்டில் இன்று நல்லாட்சியின் பின் அனைவருக்கும் சமமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் அவர் கூறியது போன்று எதிர் காலத்தில் புல்மோட்டை குச்சவெளி நிலாவெளி பிரதேசத்திலும் மீள் குடியேறியவர்கள் உள்ளனர் அவைகளும் எதிர்காலத்தில் கவனிக்க படவேண்டும் என கூறினார்.

07. பின்னர் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமையால் சீனக்குடா மாபிள் கடற்கரை அண்டிய பகுதியிலுள்ள சிங்கள மக்கள் நால்வர் தமிழ் ஒருவர் முஸ்லிம் ஒருவருடைய காணிகளை விமானப்படையினர் அத்துமீறி பிடித்துள்ளார்கள் அவற்றை விடுவித்து கொடுக்க சபையை வேண்ட

குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் அன்வர் திருகோணமலை வரலாற்று காலத்தில் முதல் முறையாக அமைச்சர் படையினருக்கு எதிராக மக்களின் காணிகளை மீட்க கேட்பது சந்தோசமாக உள்ளது அவ்வாறுதான் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள காணிகளும் சில வீடுகளையும் படையினர் ஆக்கிரமித்திருப்பது இந்த கூட்டத்தில் பல முறை கொண்டு வரபட்டது அவற்றுக்கு நியாயம் கிடைப்பது போன்று புல்மோட்டை பிரதேசமக்களுக்கும் நியாயம் வேண்டும் என கேட்டுக்கொண்டு குறித்த சீனக்குடா காணி குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கும்படி வேண்டிக்கொண்டார் பின்னர் அன்வரால் அரசாங்க அதிபரிடம் இவ்வாறு புல்மோட்டை அரிசிமலை வீடுகளை விடுவிக்கும்படி கடந்த கூட்டத்தில் தீர்மனிக்கபட்டு கடிதம் அனுப்புவதாக நீங்கள் கூறியது அனுப்பி வைத்தீர்களா என கேள்வி எழுப்பினார்

இவ்வாறு சபை நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என கூற குறித்த புல்மோட்டை பிரதேசதிற்கான கடிதமும் அனுப்பிவைக்க தீர்மானிக்கபட்டது.

LEAVE A REPLY