“சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை உருவாக்க வேண்டும்” அப்துர் ரஹ்மான்

0
171

NFGG Logo 1“நாம் பெற்றுக்கொள்ளும் கல்வி வெறும் தகமைகளை மாத்திரம் பெற்றுத்தருவதாக அல்லாமல் தன் தன்னம்பிக்கையினையும் பெற்றுத் தருவதாக அமைய வேண்டும். அப்போதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை கல்வியின் மூலம் உருவாக்க முடியும்” என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜோர்டான் நட்டிற்க்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் கின்னியாவை சேர்ந்த முகம்மட் லாபீர் அவர்களை கெளரவிப்பதற்கான நிகழ்வு கடந்த 28/05/2016 அன்று கின்னியாவில் நடைபெற்றது. SLMCயின் தலைவரும் அமைச்சருமாகிய ரவூப்ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது..

“இன்று இங்கு கெளரவிக்கப்படுகின்ற தூதுவர் முகம்மட் லாபீர்  இளம் சமூதயத்தினருக்கு ஓர் சிறந்த முன்னுதரணனமாவார். இன்று இந்த உயர் நிலையை அவர் அடைவதற்கு அவர் பெற்றுக்கொண்ட கல்வி மாத்திரம் காரணமன்று; அவரிடமிருந்த தன் நம்பிக்கையும் இலட்சிய வேட்கையும் விட முயற்சியுமே இதற்கான காரணங்களாகும்.

இன்று கல்வி என்பது ஒரு தகமையையும் அதன் மூலம் ஒரு தொழிலையும் பெற்றுக்கொள்வதற்கானதே என்ற குறுகிய பார்வையில் நோக்கப்படுகின்றது. இதன் காரணமாக பட்டங்களை பெற்றுக்கொள்கின்ற பல பேர் அதற்கு அப்பால் பெரிய இலட்சியங்களும் எதுவுமின்றி அத்தோடு முயற்சியும் உழைப்புமின்றி முடங்கி விடுகின்றனர். நமக்கான ஒரு சிறிய தொழிலை பெறுவதற்குக்கூட தாம் பெற்றுக்கொண்ட கல்வி மீதும் தமது திறமை மீதும் நம்பிக்கை கொள்ளாமல் அடுத்தவர்களின் காலடிகளில் சரணடைகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கின்றோம்.

இதற்கு காரணம் அவர்கள் பெற்றுக்கொண்ட கல்வி தன் நம்பிக்கையை பெற்றுக்கொடுக்கவில்லை. வாழ்கையின் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளக்கூடிய ஆழுமையினை பெற்றுக்கொடுக்கவில்லை. கல்வியின் நோக்கம் எமது சமூகத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாததன் விளைவே இதுவாகும். கல்வி என்பது சான்றிதழ்களையும்,தகமைகளையும் மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழி முறை அன்று. அது மாறாக அது ஒவ்வெருவருக்கும்
ஒழுக்கத்தையும் தன் நம்பிக்கையினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களையும் அதனை அடைவதற்கான விடா முயற்சியினையும் அது ஏற்படுத்த வேண்டும்.

கல்வி என்பது இப்படியான நோக்கங்களை நிறைவு செய்கின்ற போதுதான் கல்வியின் மூலம் சா சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை நாம் கானமுடியும். இன்று
சாதனையாளராக கெளரவிக்கப்படுகின்ற சகோதரர் லாபீர்  இந்த கின்னியா சமுகத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். இவரை முன்னுதாரணமாகக் கொண்டு நமது இளைஞர்களும் நமது சொந்த வாழ்க்கையில் சிறந்த சாதனைகளை செய்வது மாத்திரமின்றி , நல்ல பல சமூக மாற்றங்களையும் நிகழ்த்துபவர்களாக உருவாக வேண்டும்.”

LEAVE A REPLY