வாழைச்சேனை பகுதியில் அதிகரித்துள்ள கசிப்பு வியாபாரம் – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

0
87

( முஹமட் அஸ்மி)

imageமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கசிப்பு காய்ச்சும் செயற்பாடும் மற்றும் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் இதனால் குறித்த பிரதேசத்தில் பல்வேறு சமூக பிரழ்வுகள் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து மட்டக்களப்பு போதை ஒழிப்பு பிரிவின் பொருப்பாளரும் பொலிஸ் பரிசோதகருமான வஹாப் தலைமையிலான போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த ஓமடியாமடு பகுதியில் விஷேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று முன்தினம் விஷேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் வஹாப் மற்றும் பொலிஸ் அதிகாரி தாஹா ஆகியோர் அடங்களான குழுவினர் பைக்கற்றாக பொதி செய்யப்பட்ட கசிப்புடன் இளைஞ்சர் ஒருவரை கைது செய்து வாழைச்சேனை பொலிஸ் ஊடாக நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

குறித்த பகுதியில் தொடர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதுடன் முழு மாவட்டத்திலும் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என பொலிஸ் பரிசாதகர் வஹாப் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY