அட்டாளைச்சேனை பிரதான வீதியில இடம்பெற்ற கார் விபத்தில் ஜெம்ஸத் வபாத்

0
100

(றிசாத் ஏ காதர்)

7ad4c3e0-430e-4fb3-8895-92de848e142fஅம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று (01) புதன்கிழமை மாலை 03.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவர் ஒருவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இவ் விபத்தில் இறந்தவர் வீதியை கடக்க முற்பட்ட போது கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற கார் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை 08ம் பிரிவைச் சேர்ந்த ஜே. ஜெம்ஸத் (வயது-12) என்ற மாணவனே இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY