சட்ட விரோத மரம் பிடிபட்டதுடன் – மூன்று இராணுவ வீரர்களும் கைது

0
111

(வாழைச்சேனை நிருபர் )

c39d596f-0d7f-49ab-90e4-6c990ce6c11eகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தொப்பிகல – பல்லத்துச்சேனை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஏற்றிவந்த முதுரை மரங்களையும் மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று (31.05.2016) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியாலய பிராந்திய வன உத்தியோகத்தர் எப்.முஹம்மட் சிபான் தெரிவித்தார்.

தொப்பிகல காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுவதாக வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு இராணுவத்தின் உதவியுடன் சென்ற வாழைச்சேனை வட்டார வன காரியாலய உத்தியோகத்தர்கள் இருபத்திநாலு (24) முதுரை மரங்களையும் அதனை ஏற்ற பயன்படுத்திய உழவு இயந்திரம் என்பவற்றை கைப்பற்றியதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட நான்கு பேரில் இருவர் தப்பியோடிவிட்டதகவும் இருவரை கைது செய்து இன்று (01.06.2016) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகவும் பிராந்திய வன உத்தியோகத்தர் எப்.முஹம்மட் சிபான் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 14.06.2016ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இதே வேலை நேற்று (31.05.2016) தொப்பிகல காட்டுப்பகுதியில் சட்ட விரேதமான முறையில் மிருகங்களை வேட்டையாடுவதாக தகவலறிந்த கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கிரான் பிரதேச செயலக பிரிவில் பூலாக்காடு கிராம சேவை உத்தியோகத்தர் சன்முகம் குருவும் இரவு 07.30 மணியளவில் சென்றுள்ளனர் சென்றவர்கள் இரவு 09.00 மணியளவில் உழவு இயந்திரத்தில் மரங்களுடன் எட்டுப் பேர் இருந்துள்ளனர் இவர்களை விசாரித்ததில் தாங்கள் இராணுவம் என்றும் வாழைச்சேனை வட்டார வன காரியாலய அதிகாரிகள் தங்களது பல்லத்துச்சேனை இராணுவ முகாமில் இருப்பதாகவும் சந்தேக நபர்களையும் மரங்களையும் அவர்களிடமே ஒப்படைக்கப்போவதாகவும் கிராம சேவை அதிகாரி இராணுவ முகாமிற்கு வந்து ஒப்படைக்கலாம் என்றுகூறி கிராம சேவை உத்தியோகத்தரை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று (01.06.2016) அதிகாலை 04.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் பல்லத்துச்சேனை இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்கள் மூன்று பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

c39d596f-0d7f-49ab-90e4-6c990ce6c11e

e85dce16-1610-4b60-b7bf-2cc1ada7a404

6ef1c6ac-238e-4ac0-b337-97a75f531ac9

b7ad82b9-e9c4-4ed9-9254-79a7e3416625

LEAVE A REPLY