அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது – எஸ்.பி. திஸாநாயக்க

0
92

sb1_CIஅரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்ளம் இயலுமை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஏனைய நிதி நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் அரசாங்க நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சி சில விரும்பத்தகாத தீர்மானங்களை எடுக்க நேரிட்டமைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இந்த நடவடிக்கைகள் குறுகிய கால அடிப்படையிலானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY