இங்கிலாந்து தொடரை மொகமது ஆமிர் திறமையாக கையாள்வார்: அசார் அலி

0
153

201606011558081521_Return-to-England-will-be-tough-but-Mohammad-Amir-can_SECVPF2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சல்மாட் பட், வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிப் மற்றும் மொகமது ஆமிர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதில் மொகமது ஆமிர் ஜெயில் தண்டனை அனுபவித்ததோடு, ஐந்தாண்டு தடையும் பெற்றார். தண்டனைக் காலம் முடிந்தபின் மொகமது ஆமிர் சர்வதேச போட்டிக்கு திரும்பினார்.

மொகமது ஆமிர் பாகிஸ்தான் அணிக்கு திரும்பிய பின்னர் நியூசிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர், வங்காள தேசத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை டி20 தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார். இதனால் இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்ள விசா வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணியில் ஆமிர் இடம்பிடித்ததும், அந்த அணியின் ஒருநாள் அணி கேப்டனான அசார் அலி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், தற்போது இங்கிலாந்து தொடரில் ஆமிர் இடம்பிடித்தால், அவருக்கு அணி முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘2010-ல் என்ன நடந்து என்பது கடந்தகால விஷயங்கள். ஆனால், தற்போது நாம் முன்னோக்கி செல்வது தேவையானது. தற்போது அவர் எங்களுடன் உள்ளார். அவர் எங்களுடன் நேரடியாக இந்த தொடருக்கு வந்திருந்தால் அது கடினமாக இருந்திருக்கும். ஆனால், எங்களுடன் நீண்ட நாட்கள் விளையாடி, நன்றாக ஒன்றிணைந்த பின் இந்த தொடர் வருகிறது.

தற்போது ஆமிர் நெருக்கடியில் இருக்கமாட்டார். ஏனென்றால், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே அணிக்கு திரும்பி, நெருக்கடியை கடந்து விட்டார். இங்கிலாந்து அவருக்கு சம்பவம் (மேட்ச் பிக்சிங் புகார்) நடந்த இடம் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், அணிக்கு திரும்பியதுபோல் இந்த நெருக்கடியையும் சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தாலும, ஏதாவது சம்பவம் நடந்தால் நாங்கள் கூட்டாக அதை சமாளிப்போம்’’ என்றார்.

ஜூலை 14-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

LEAVE A REPLY