பள்ளிவாயல் தலைவர் பொறுப்பிலிருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயலுக்கு கண்டனம்

0
147

KLM Fareed(முஹம்மத் பர்சாத்) 

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் என்ற அமானிதமான பொறுப்பிலிருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயல்பாட்டினை பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் பலர் எமது வன்மையான கண்டனத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (30.5.2016) நடாத்த இருந்த அரச கட்டடம் ஒன்றிக்கான அடிக்கல் நாட்டு விழா நிறுத்தப்பட்டுள்ளது என ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களில் கான முடிந்தது. இந்த ஊடக அறிக்கையினை வெளியிட்டவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்த ஊடக அறிக்கையினை நாம் பார்த்தபோது புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் சபை உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் பலர் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். காரணம் அந்த அறிக்கையானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மாத்திரமின்றி ஊடக அறிக்கை விடுவது தொடர்பில் நிர்வாக சபை கூட்டத்தின் போது எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

உண்மையாகவே கே.எல்.எம்.பரீட் என்பவர் அடிக்கல் நாட்டு விழா தொடர்பில் தனது அரசியல் சார்ந்நவர்களுக்கு ஆதரவாக ஊடக அறிக்கை விட விரும்பி; இருந்தால் பள்ளிவாயல் பெயரை பயன்படுத்தி இருக்க கூடாது. பள்ளிவாயல் தலைவர் என்ற ரீதியில் தனது அரசியல் நாடகத்தை நடாத்தி இருக்கக் கூடாது என்பதே எமது நிர்வாகிகள் பலரின் கருத்தாகும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைமை சார்ந்தவர்கள் தான் ஆனால் அதற்காக அல்லாஹ்வின் இல்லத்தை இவ்வாறு அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

உண்மையில் புதிய காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயம் தற்போது இருக்கும் காணியானது பள்ளிவாயலுக்குறியது தான் என இது வரை எந்தரப்பாலும் உறுதியாக கூறவுமில்லை அதற்கான காணி உறுதிப்பத்திரத்தினை பள்ளிவாயலுக்கு வழங்கவுமில்லை.

ஆனால் அது இன்னமும் அரசகாணியாகவே உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்தவர் அபேஸ் பன்னுவதற்கு முன் அதனை பள்ளிவாயல் சொத்தாக மாற்ற நாமனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்மால் முடியாது போனால் அதற்காக மக்கள் போராட்டம் ஒன்றினை நடாத்த வேண்டும்.

கிழக்கு முதலமைச்சரின் அடிக்கல் நாட்டு விழா தொடர்பில் கடந்த 29.5.2016 அன்று பள்ளிவாயலில் இடம் பெற்ற கூட்டத்தின் போது பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபர் யூனுஸ் அவர்களையும் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்களையும் பள்ளிவாயலுக்கு அழைத்து அடிக்கல் நடும் விடயமாக வினவியபோது பாடாலை தற்போது இருக்கும் பள்ளிவாயல் காணியில் எக்காரணம் கொண்டும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இடம்பெறாது என அதிபர் உறுதியாக செல்லி பள்ளிவாயலின் கூட்டறிக்கையிலும் எழுத்து மூலம் பள்ளிவாயலுக்கு செந்தமான காணியில் அடிக்கல் வைக்கப்படாது என கையப்பம் இட்டிருக்கிறார்.

அதிபரின் இந்த பதில் நிர்வாகிகளுக்கு திருப்தியாக இருந்தமையால் நிர்வாகிகள் ஒரு முடிவுக்கு வந்தனர் பாடாலைக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்கா வளவினுல் அடிக்கல் நாட்டப்பட்ட இருப்பதற்கும் பள்ளிவாயலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, அது அவர்கள் பிரச்சினை என்று முடிவு செய்ததுடன் ஒரு வேளை யாரும் அறியாமல் பள்ளிவாயல் காணிக்குள் அடிக்கல்லினை நாட்டி விடுவார்கள் என்ற ஒரு ஜயம் உள்ளதால் தற்காப்புக்காக நிர்வாக சபை உறுப்பினர்கள் காலை 7 மணி முதல் 11 மணிவரை பள்ளிவாயல் குர்ஆன் மதரசா கட்டிடத்தினுள் இருப்பது என்று மாத்திரமே மசூறா செய்யப்பட்டது.

ஆனால் இதனை பயன்படுத்திக் கொண்டுதான் மேற்படி கே.எல்.எம்.பரீட் பாடசாலை அமைக்க தற்காலிகமாக கொடுக்கப்பட்ட பள்ளிவாயல் காணியில் எவ்வித அனுமதியும் இன்றி அத்து மீறி அரச கட்டடம் ஒன்றினை நிறுவதற்காக அடிக்கல் நடும் விழாவினை முதலமைச்சர் குழு நடாத்த இருந்தனர் என்றும் எனவே அதனை நாங்கள் அனுமதிப்பதில்லை என அவசரமாக எங்கள் பள்ளிவாயல் நிருவாகத்தினர் கூடி முடிவு செய்திருக்கின்றார்கள் என்று பரீட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருப்பது என்பது அப்பட்டமான பொய்யாகும்.

இப்படி கூட்ட தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதனை தெளிவாக தெரிவிப்பதுடன் இதனை பள்ளிவாயல் நிர்வாகிகளாகிய எம்மில் பலர் வன்மையாக கன்டிக்கின்றோம். பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டப் போகின்றார் என்றால்தான் பள்ளிவாயல் தலையிட முடியும். பக்கத்து காணியில் முதலமைச்சர் அடிக்கல் நடப்போகின்றார் என்று தெளிவாக தெரிந்திருந்தும் அதனை பள்ளிவாயல் தலைவர் என்ற வகையில் தான் தடுப்பதாக பரீட் ஆடிய ஆட்டத்தில் உள் நோக்கம் தான் என்ன ……?
நாம் எல்லோரும் நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்டு மசூறா செய்யும் ஒவ்வொரு விடயமும் பள்ளிவாயலின் நலன் கருதியே தவிர நமது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அரசியல் இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக அல்ல என்பதனை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்ட தீர்மானம் இல்லாமல் எந்த ஒரு உறுப்பினரும் ஊடக அறிக்கையினை வழுங்க கூடாது. அப்படி அவசர தேவை நிமித்தம் அறிக்கை வழங்குவதாயின் அதில் தனது தனிப்பட்ட கருத்துக்களை வழங்குவது என்பது மாபெறும் தவறாகும். ஒரு தவறான அறிக்கை என்பது முழு ஜமாஅத்தார்களையும் அது பாதிக்கும் என்ற விடயத்தினை தெரிந்திருத்தல் மிக அவசியமாகும்.

எம்மை ஜமாஅத்தார்கள் எவ்வாறு உறுப்பினர்களாக தெரிவு செய்தார்களோ அதே ஜமாஅத்தார்களுக்கு மேலும் விசேட பொதுச்சபை ஒன்றினை கூட்டும் அதிகாரம் சட்டத்தில் இடம் உண்டு என்பதனை நாம் தெரிந்து செயல்பட வேண்டும்.

சத்தியம் வந்தால் அசத்தியம் அழியும் என்பதுடன் சத்தியம் ஒரு போதும் தோற்றுப்போன வரலாறு இஸ்லாத்தில் இல்லை என்பதனை நாமனைவரும் அறிவோம்.

நல்லாட்சியில் நாம் பெற்ற இரண்டு பிரதான விடயங்கள்.
1. ஊழலை ஒழித்தல்.
2. ஊடக சுதந்திரம்.
எனவே ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக அதனை தான்தோற்றித்தனமாக பயன்படுத்தக் கூடாது என வியனமாக வேணடிக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY