விஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுலை

0
111

vijitha-herath_1மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விஜித்த ஹேரத்தின் வாகனம் நேற்று முன்தினம் இரவு ராஜகிரிய சந்தியில் உள்ள தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எது எவ்வாறு இருப்பினும், தான் போதையில் வாகனம் செலுத்தவில்லை என, விஜித்த ஹேரத் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இன்று கொழும்பு மோட்டார் வாகன நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து அவரை நீதிபதி விடுவித்தார்.

-ET-

LEAVE A REPLY