இலங்கை வீரர் எரங்கா பந்து வீச்சில் சந்தேகம்

0
103

201606010921045321_suspected-of-bowling-Sri-Lanka-player-Eranka_SECVPFஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்காவின் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக போட்டி நடுவர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த 14 நாட்களுக்குள் எரங்கா தனது பந்து வீச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அதுவரை அவர் தொடர்ந்து விளையாடலாம். சோதனை முடிவுக்கு பிறகு தான் அவர் மீதான நடவடிக்கை குறித்து தெரிய வரும். பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருந்தால் அவர் தனது பந்து வீச்சு முறையை திருத்தி கொள்ளும் வரை கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்படும். இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் தமிகா பிரசாத், சமீரா ஆகியோர் காயம் காரணமாக தாயகம் திரும்பிய நிலையில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பது இலங்கை அணிக்கு பெருத்த பின்னடைவாக அமையும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY