தெண்டுல்கர் சாதனையை அலைஸ்டர் குக் முறியடிப்பது சவாலானது – சுனில் கவாஸ்கர்

0
121

201606011304571147_Cook-can-challenge-Tendulkars-Test-run-record-Gavaskar_SECVPFஇங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கேப்டன் அலைஸ்டர் குக் இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னை கடந்தார்.

டெஸ்டில் குறைந்த வயதில் 10 ஆயிரம் ரன்னை கடந்த தெண்டுல்கர் (31 வயது 326 நாள்) சாதனையை குக் (31 வயது 157 நாட்கள்) முறியடித்தார்.

இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்துள்ள சச்சின் தெண்டுல்கர் (15921) சாதனையை குக் முறியடிக்க முடியும் என்று இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பேலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பதில் அளித்தார். தெண்டுல்கர் சாதனையை குக் முறியடிப்பது சவாலானது என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

இங்கிலாந்து அணி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இது அவருக்கு சாதகமான விஷயம். இதில் ஒவ்வொரு டெஸ்டிலும் 50 ரன் எடுத்தால் ஆண்டுக்கு 500 ரன் எடுக்கலாம். குக் அடுத்த 6 முதல் 7 ஆண்டு வரை சிறப்பாக விளையாட வேண்டும்.

ஆண்டுக்கு 1000 ரன் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் ஒருவேளை தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க நல்ல வாய்ப்பு அவருக்கு இருக்கும். குக் நல்ல உடல் தகுதியுடன் உள்ள வீரர். அவர் 6 ஆண்டு வரை விளையாட முடியும்.

ஆனால் விதவிதமான ஆடுகளம், சூழ்நிலையில் விளையாடும்போது சிரமம் ஏற்படும். மேலும் சொந்த மண்ணில் திறமையான அணிக்கு எதிரான ரன் குவிப்பது கடினமாகவும் இருக்கும். இதனால் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க குக் நிறைய உழைக்க வேண்டும்.

குக் 128 டெஸ்டில் 10 ஆயிரத்து 42 ரன் எடுத்துள்ளார். 28 சதமும், 47 அரை சதமும் அடித்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY