டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியல்: முதல் முறையாக முதலிடம் பிடித்த ஆண்டர்சன்

0
141

Ball Test Cricketசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (மொத்தம்884 புள்ளி) இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆண்டர்சன் முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்டூவர்ட் பிராட்(869 புள்ளி) 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (871 புள்ளி) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் 3-வதுஇடத்திலும் நீடிக்கிறார்கள்.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 11-வது இடத்திலும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 13-வது இடத்திலும் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 155 ஓட்டங்கள்விளாசிய இங்கிலாந்து வீரர் மொயீன் அலி12 இடங்கள் உயர்ந்து 35-வது இடத்தை பெற்றுள்ளார். அலஸ்டயர் குக் 15-வது இடம் வகிக்கிறார்.

டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையேஅஸ்வின், ஷகிப் அல்-ஹசன்(வங்காளதேசம்), ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY