சீ.எஸ்.என். தொலைக்காட்சி ராஜபக்ஸக்களுக்கு சொந்தமானதல்ல – நாமல் ராஜபக்ஸ

0
115

imageசீ.எஸ்.என். தொலைக்காட்சி ராஜபக்ஸக்களுக்கு சொந்தமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஸவின் காதலி தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதாகவும் அதுவே அந்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் காணப்படும் தொடர்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ அடிக்கடி தொலைக்காட்சி சேவைக்கு விஜயம் செய்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். காதலி ஒர் உதவியைக் கோரினாலும் எந்தவொரு காதலனும் அதனைச் செய்வர் என தெரிவித்துள்ளார். கார்ல்டன் என்ற பெயர் ராஜபக்ஸக்களினால் காப்புரிமம் பெற்றதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY