சான் அல்விஷ் – மாணவனின் விபத்தினையை ஏன் ரோயல் கல்லூரிமூடி மறைத்தது?

0
190

(அஷ்ரப் ஏ சமத்)

imageகொள்ளுப்பிட்டி 297 மாவத்தையில் தந்தை இழந்து வசித்த வந்த மாணவன் சான் அல்விஸ் (வயது 17) சிறந்த விளையாட்டு வீராரக திகழ்ந்தான்.

அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் 2013ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு கல்விகற்றுக் கொண்டிருந்தான். நீச்சல் துறையிலும் கல்வியிலும் மிகவும் ஆர்வம் கொண்டு விளங்கிய இவ் ஏழை மாணவன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிறந்தாலும் அவன் ஒரு முடுக்கு வீட்டிலேயே தனது தாயுடன் வாழ்ந்து  வந்தான்.

இம் மாணவன் கல்லூரியின் நீச்சல் பிரிவு, சாரணர் போன்ற துறைகளில் சிறு வயதில் இருந்தே சிறந்து விளங்கினான்.

அவன் கொழும்பு ரோயல் கல்லூரியில் நீச்சல் பயிற்சியில் 2013 மார்ச் 20ஆம் திகதி ஈடுபட்டு கொண்டிருக்கையிலேயே தனது தலை நீச்சல் தடாகத்தில் அமுக்கப்பட்டு முச்சுத் தினறியதாகவும் ஒட்சிசன் இல்லாமல் தடாகத்தில் கிடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது அங்கு கடமையில் நீச்சல் பயிற்சி போதானாசிரியர் இருக்க வில்லையா? சக மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட வில்லையா, சீ.சீ.டி கமார அங்கு இருக்க வில்லையா? என ஊடகங்கள் சந்தேகங்களை கிளப்புகின்றன.

மேலும் இம் மாணவன் கடந்த 3 வருடங்களாக தனது சிறு வீட்டிற்குள்ளேயே கோமா நிலையிலேயே வாழ்ந்து வருகின்றான். இம் மாணவனுக்கு நடந்த சம்பவங்கள் என்ன?, இம் மாணவனின் சக மாணவர்கள் தற்போது க.பொ.த உயர்தரம் வரை கற்கின்றனர்.

ஆனால் இம் மாணவன் தனது 9 வகுப்பில் ஏற்பட்ட சம்பவத்தினால் வீட்டில் நோயினால் படுத்த படுக்கையுடன் வாடுகின்றான்.

சான் அல்விசின் வாழ்க்கைக்கு உலை வைத்தவர்கள் யார்? ஏன் இந்த மாணவனுக்கு நடந்த நீச்சல் பயிற்சியின்போது நடந்த அணியாயங்கள் ஏன் அப்போதே ரோயல் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களால் நிறுவாகத்தினால் ஊடகங்களுக்கு கொண்டு வரவில்லை.

ஒரு தந்தை இழந்த ஓர் ஏழை மாணவன் அதுவும் முடுக்கு வீட்டில் வாழ்ந்தவன் என்பதனால் அவனுக்கு நடந்த விபத்து வெளிவராமல் கல்லூரியினால் தடுக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

3 வருடங்களுக்குப் பிறகு அம் மாணவன் குடியிருந்த வீடும் கூட வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட பின்பே அம் மாணவனின் கதை நோய்யுற்றிருப்பது பற்றியும் குடியிருப்பதற்கு வீடொன்று இல்லாமல் தனது தாயும், தங்கையுடன் நடு வீதியில் உள்ளான் என்ற அவல நிலை முதலில் முகநூலில் வெளிவந்தன.

அதன் பின்பே அதனைத் தொடர்ந்து ஊடகங்களும் இம் மாணவனின் கதையை கடந்த வாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இதனை அவதானித்த வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (31)ஆம் திகதி அலறி மாளிகையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மருதானையில் 797 வத்தையில் நிர்மாணிக்கப்பட்ட தொடர் மாடி வீட்டின் கீழ் மாடியில் மிகுதியாக இருந்த ஒரு வீட்டினை 36 இலட்சம் பெறுமதி வாய்ந்த வீட்டின் திறப்பை மாணவனின் தாயிடம் இலவசமாக வழங்கி வைத்தனர்.

LEAVE A REPLY