எச்.ஏ. அஸீஸின் ”ஐந்து கண்டங்களின் மண்” கவிதை நூல் வெளியீட்டு விழா

0
132

(முனீரா அபூபக்கர்)

imageதற்போது வெளி விவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரிய நாட்டின் தூதுவருமான கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ” ஐந்து கண்டங்களின் மண்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை (26-05-2016) அன்று பி.ப. 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வைத்தியக் கலாநிதி தாஸிம் அகமது தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர். மன்சூர், பேரியல் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிமுவுரையை சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், நூல் மீளாய்வு பற்றிய உரையை கலாநிதி சுமதி சிவமோகனும் நிகழ்த்தினர். காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் நூலின் காலம்,கருப்பொருள்,காட்சி பற்றி சிறப்புக் கவிதை பாடியதோடு கருத்துரையை நான் காணும் நல்லிணக்கம் தலைப்பில் தம்பு சிவாவும் சிறப்புரையை சிறப்பு அதிதியும் நிகழ்த்தினர்.

கவிதை நூலின் முதற் பிரதியை அன்னாரின் மாமியார் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி ரைஹானா அபூசாலியிடம் கையளிக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பல கல்விமான்களும் கலந்து இவ்விழாவைச் சிறப்பித்தனர். அத்துடன் நிகழ்ச்சிகளை பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தொகுத்து வழங்கினார். நூலாசிரியரின் ஏற்புரையுடன் இவ்விழா இனிதே நிகழ்வடைந்நது.

LEAVE A REPLY