இந்திய ராணுவத்தின் வெடி மருந்து கிடங்கில் பாரிய தீ விபத்து : 17 பேர் பலி

0
135

இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய வெடி மருந்து இருப்பு கிடங்கொன்றில் நடந்த பெரும் தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள். இவர்களில் இரண்டு அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தின் புல்கோவான் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் ஏற்பட்ட வெடிப்பிற்கு பின்னர் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

இப்பகுதியின் அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் 1000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்ற காரணம் இன்னும் தெரியவில்லை என இந்திய பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY