(Photo) உலக சுற்றாடல் தினம் வாழைச்சேனையில்….

0
85

(வாழைச்சேனை நிருபர்)

imageஉலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நாடலாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாட்டில் “வனஜீவராசிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக எழுவோம்.” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வாழைச்சேனை பிரதேசத்தில் இடம் பெற்றது.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுற்றாடல் முன்னோடி மாணவிகளின் பங்களிப்புடன் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி பள்ளிவாயல் வீதி, மக்களடி வீதி, மீன்பிடி இலாகா வீதி துறைமுக வீதி வழியாக மீண்டும் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தை வந்தடைந்ததுடன் ஊர்வலத்தின் போது சுற்றாடலை பாதுகாப்போம் என்று துண்டுப் பிரசுரங்களும் பாடசாலை மாணவிகளால் வினியோகிக்கப்பட்டன.

பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட்,  மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.என்.எம்.பைசல், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

image

LEAVE A REPLY