வரி ஏய்ப்பு மோசடி: இன்று விசாரணையை எதிர்கொள்ளும் லியோனெல் மெஸ்ஸி

0
124

imageஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரி செலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பார்சிலானோ மற்றும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, இன்று விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

இது வரை 5 முறை வருடத்தின் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை வென்ற மெஸ்ஸியும், அவரது நிதி விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் அவரது தந்தை ஜோர்ஜும் வரி ஏய்ப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

பெலிஸ் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் உள்ள வரியிலிருந்து புகலிடம் அளிக்கும் வசதியினை பயன்படுத்தி பட உரிமை மூலம் கிடைத்த வருமானத்தை மெஸ்ஸியும், அவரது தந்தையும் மறைத்துள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மெஸ்ஸி மீதான விசாரணை மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸிக்கும், அவரது தந்தைக்குக்கும் அதிகளவில் அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகியவற்றை ஸ்பெயினின் வரி முகைமை கோரியுள்ளது.

ஆனால், மெஸ்ஸியும், அவரது தந்தையும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.

-BBC-

LEAVE A REPLY