இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்களின் விலை குறைவடையும்.!

0
173

images_slopingஇறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­களின் இறக்­கு­மதி வரியை நிதி­ய­மைச்சு அண்­மையில் மீளாய்வு செய்­ததையடுத்து, இலங்கை சந்­தையில் வாக­னங்­களின் விலை பாரிய அளவு அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்படும் சிறிய ரக கார்­களின் விலை குறை­வ­டையும் வாய்ப்­புள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட வர்­த்தமா­னிய அறி­வித்­தலின் பிர­காரம் 800 சிசி மற்றும் 1,000 சிசி இயந்­திர கொள்­ள­ள­வைக் ­கொண்ட வாக­னங்­களின் இறக்­கு­மதி வரி குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இவ் ரகத்தை சேர்ந்த வாக­னங்­களின் சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அந்த வகையில் இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனே­க­மான கார்கள் 800சிசி மற்றும் 1,000சிசி இயந்­திர கொள்­ள­ளவைக் கொண்­டுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இந்நிலையில் இறக்­கு­மதி செய்­யப்­படும் மாருதி வேகன்-ஆர் போன்ற கார்­களின் இறக்­கு­மதி வரி 1.5 – 1.6 மில்­லியன் ரூபாவில் இருந்து 1.35 மில்­லியன் ரூபா­வாக குறை­வ­டைந்­துள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யாளர்கள் சுட்­டிக் ­காட்­டு­கின்­றனர்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் முச்­சக்­கர வண்­டி­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி பாரிய அளவு அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டிகளின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#Virakesari

LEAVE A REPLY