500 வறிய மாணவர்களுக்கு உதவும் உள்ளங்கள் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
176

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

5c857232-d815-4302-8a97-d1448e46bfaaஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள 500 வறிய மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பட்டதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் அக்கீல் அர்ஸாத் தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்நிகழ்வின் போது முதலாவது தொகுதியாகத் தெரிவு செய்யப்பட்ட 500 வறிய மாணவர்கள் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதேவேளை அறபா வித்தியாலய மாணவர்களின் நலன்புரி வேலைகளுக்காக இருபத்தையாயிரம் ரூபாய் நன்கொடைப் பணமும் ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் பாடசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் பணிப்பாளர் அக்கீல் அர்ஸாத் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் மாணவர்களும் பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY