மட்டக்களப்பில் சூழலைப் பாதுகாக்கும் விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்

0
133

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

World Env Day 2016-Poster 2உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சூழலைப் பாதுகாக்கும் ‘விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்’ ஜுன் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடிப்பாலச் சந்தை திறந்த வெளியில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி முற்றிலும் இலவசம்.

இக்கண்காட்சியில் விஷேடமாக எமது இயற்கைச் சூழல் மாசுபடாமல் பாதுகாத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்தல், உயிரினங்களைப் பாதுகாத்தல், சேதனப்பசளைப் பயன்பபாட்டை ஊக்குவித்தல், மற்றும் எமது உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பசுமை உலகை நோக்கிய செயற்பாடுகள் சம்பந்தமாக பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வையும் அறிவையும் தரக்கூடிய கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூழல் நலன் சார்ந்த மற்றும் ஆரோக்கியமான பொருட்களும் இக்கண்காட்சியல் விற்பனைக்கு இடம்பிடித்துள்ளன.

களிப்பூட்டும் அம்சங்களுடன் எமது சூழலைப் பாதுகாக்கும் அறிவினைப் பெற்றிட வாரீர்.

World Env Day 2016-Poster 2

LEAVE A REPLY