தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

0
106

201605311255097208_Earthquake-Measuring-6-1-Jolts-Parts-Of-Taiwan_SECVPFதைவான் நாட்டில் தலைநகர் தைபே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் தைபேயின் வடகிழக்கில் சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தைபே நகரில் உள்ள கட்டிடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். அதேபோல் அந்நாட்டு பாராளுமன்றம், சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 அலகாக பதிவாகி உள்ளதாக தைவான் மத்திய வானிலை செயலகம் கூறியுள்ளது. இருப்பினும் 6.1 அலகாக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY