சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று!

0
83

e57c87632a27832909d1e5b8bbffdb83_Lஉலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வருடாந்தம் காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொனிப் பொருளை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இம்முறைக்கான தொனிப்பொருளாக ‘ உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது.’ ( எந்தவிதமான விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரெட் பெட்டி.) அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிகரெட் புகைப்பிடிப்பதனால் மது பாவனையால் நாளொன்றிற்கு 60 பேர் மரணிக்கின்றனர். இதனால் வருடமொன்றிற்கு இதனால் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 மாகும். சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும் புகைத்தல் காரணமின்றி ஆனால் புகைப்பிடிப்பவர்களை சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக வருடமொன்றிற்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அவ்வகையில் நமது நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் முகமாக பல விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு இவ் விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார சேவைகள் பொதுப்பணிப்பாளர் டொக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY